புதிய விளையாட்டான கால் மேசை பந்தாட்டம் (TeqBall) யாழ்ப்பாணத்தில் அறிமுகம் - Yarl Voice புதிய விளையாட்டான கால் மேசை பந்தாட்டம் (TeqBall) யாழ்ப்பாணத்தில் அறிமுகம் - Yarl Voice

புதிய விளையாட்டான கால் மேசை பந்தாட்டம் (TeqBall) யாழ்ப்பாணத்தில் அறிமுகம்





இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72ஆவது விளையாட்டாக அறிமுகப்படுத்திய கால் மேசை பந்தாட்டம் (TeqBall) முதல் தடவையாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று  சனிக்கிழமை காலை 9  மணிக்கு வல்வெட்டித்துறை வல்வை  விளையாட்டு அரங்கில் (futsal  play ground) நடைபெற்றது. 

யாழ்ப்பாணம் மாவட்ட இணைப்பாளராக சிவா  ஜீவிந்தன்  இலங்கை ரெக்பந்தாட்ட சம்மேளனம் நியமித்துள்ளது. 

இந்நிகழ்வுக்கு இலங்கை ரெக் சங்கம் சார்பாக இலங்கைக்கான ரெக்பந்தாட்ட அபிவிருத்தி முகாமையாளர் சிவராஜா கோபிநாத், சம்மேளனத்தின் உயர் அதிகாரிகள் ரஞ்சித் மற்றும் மருத்துவர் கணேசநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பங்கேற்றார்.

நிகழ்வில் வடமாகாண விளையாட்டு கழகங்களுக்கு 15 லட்சம் ரூபாய் பெறுமதியான ரெக்பந்தாட்ட உபகரணங்களை கையளித்து, யாழ்ப்பபாணம் மாவட்டத்தில் ரெக்பாந்தாட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கபட்டடது.


யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு இரண்டு ரெக்பந்தாட்ட மேசை வழங்கிவைக்கப்பட்டன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post