மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேருக்கு இன்று (வியாழக்கிழமை) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த 8 பேரும் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் சந்தனா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
பி.சி.ஆர் சோதனைகளில் அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், சந்தேகநபர்கள் கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பரிசோதனை முடிவுகளில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டால் சந்தேகநபர்கள் கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுவார்கள் என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Post a Comment