வடக்கு மாகாண காணிச் சீர் திருத்த ஆணைக் குழுவின் ஆவணங்கள் அனைத்தும் கடந்த 8ஆம் திகதி அநுராதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டவை அனைத்தும் நாளை மீண்டும் யாழ்ப்பாணம் எடுத்து வரப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண காணிச் சீர் திருத்த ஆணைக் குழுவின் அலுவலகம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக வளாகத்தில் இயங்கிய நிலையில் இதன் ஆவணங்களை அநுராதபுரம் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டதனால் பெரும் எதிர்ப்புக்கள் கிளம்பியதோடு யாழ்ப்பாணம் மாவட்டம் மற்றும் கிளிநொச்சியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இந்த அலுவலக ஆவணங்களை எடுத்துச் செல்லக்கூடாது எனவும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றிய பின்பும் கடந்த 4ம் திகதி இந்த ஆவணங்களை ஏற்றிச் செல்லப்படவிருந்த சமயம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது இதன்போது யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரிடம் ஓர் மனுவும் கையளித்தனர்.
கையளித்த மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசண் குறித்த விடயம் ஆணைக்குழுவின் முடிவு என தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் உணனடியாக ஏதும் செய்ய முடியவில்லை எனப் பதிலளித்தார்.
இதன் பின்பு கடந்த 8ஆம் திகதி மாலை இரகசியமான முறையில் ஆவணங்கள் அனைத்தும் ஆணைக்குழுவின் வாகனத்தில் அநுராதபுரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கடும் அதிருப்தியை வெளியிட்டனர்.
இந்த நிலையிலேயே இன்று யாழ்ப்பாணம் வந்த அமைச்சர் குழாமில் மகிந்தானந்த அழுத்கமகேயிடம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான அங்கஜன் இராமநாதன் கொண்டு சென்றதனால் மாகாணத்தில் அதிக விமர்சனம் முன் வைக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதனால் அநுராதபுரம் கொண்டு செல்லப்பட்டதனையடுத்து அநுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் நாளை யாழ்ப்பாணம் எடுத்து வரப்படும் என்ற உறுதிமொழியை அமைச்சரால் வழங்கப்பட்டது.
இந்த உறுதிமொழியை காணி சீர் திருத்த ஆணைக்குழுவின் பி்திநிதியும் உறுதி செய்தார்.
Post a Comment