யாழில் இடம்பெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வு - Yarl Voice யாழில் இடம்பெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வு - Yarl Voice

யாழில் இடம்பெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வு




வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்குட்பட்ட விவசாயத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியாளர் (விவசாய விரிவாக்கம்) தரம் lll இல் 69 ஆளணி யினருக்கான நியமனம், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் தரம் lll மற்றும் பயிற்சித் தரத்தில் 53 ஆளணியினருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ. பத்திநாதன், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சி.திருவாகரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் விருந்தினர்களாக மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post