அம்பிகை அம்மையாரின் போராட்டம் நிறைவு - Yarl Voice அம்பிகை அம்மையாரின் போராட்டம் நிறைவு - Yarl Voice

அம்பிகை அம்மையாரின் போராட்டம் நிறைவு



பிரித்தானியா வாழ் ஈழத்துச் செயற்பாட்டாளரும் இனப் படுகொலையைத் தடுப்பது மற்றும் தண்டிப்பதற்கான சர்வதேச மையத்தின் (ICPPG) பணிப்பாளர்களில் ஒருவருமான அம்பிகை செல்வகுமார் பிரித்தானியாவில் மேற்கொண்ட சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் 17 வது நாளான இன்று ஒரு பெரும் கவனயீர்ப்பை ஏற்படுத்திய நிறைவில் முடிவுக்கு வந்துள்ளது. 

இன்று பிரித்தானிய நேரம் பிற்பகல்  3.00 மணி தொடக்கம் 5.00 மணிவரையான (இலங்கை நேரம் பிற்பகல் 8.30 ற்கு பின்) காலப்பகுதியில் நிறைவுக்கு வந்துள்ளது. 

நேற்றைய தினம் அம்பிகை அவர்களின் ஆதரவு போராட்ட களத்தில்  பொதுமக்கள் திரண்டு , ,மனிதநேயம் இல்லாதவர்களிடம் மண்டியிட்டு உயிரைப்போக்கி கொள்ள வேண்டாமென கோசமெழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

"அம்பிகையின் கோரிக்கைகளை நிறைவேற்று" " அம்பிகையை  காப்பாற்று"  என்று நேற்று அவரது வீட்டிற்குமுன் பெரும் திரளான தமிழர்கள் கிளர்ந்தெழுந்தனர். 

கிளரர்ந்தெழுந்த தமிழர்களை அடக்குவதற்கு பெருமளவிலான பிரித்தானிய பொலிஸார் குவிக்கப்பட்டனர். 

அந்த ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது பிரித்தானியப்பொலிஸார் தடியடியும் மேற்கொண்டிருந்தனர்.

தமிழரின் ஒற்றைக்குறியீடாக , அகிம்சை வழியில் போராடிய  அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்து வந்ததை அடுத்து , பிரித்தானிய அரசு மேற்படி அவரது வேண்டுதலை கவனத்தில் கொள்வதாக இருந்தால் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அவர்  கேட்டிருந்த நிலையில்,  பிரித்தானிய அரசு காட்டிய சமிக்ஞையை அடுத்து அவரது உண்ணாவிரதப்போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
Previous Post Next Post