பளையில் காணப்படுகின்ற காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை வடக்கு மாகாணம் அல்லாதவர்களுக்கு வழங்கியது உண்மை என காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வடமாகாண இணைப்பு அதிகாரி எஸ் .நிமலன் அமைச்சர்கள் முன்னிலையில் ஒத்துக்கொண்டார்.
இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த வாரம் யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களினதும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கோப்புகள் அநுராதபுரத்திற்கு கொண்டு சென்றமை தொடர்பில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அங்கஜன் ராமநாதன் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அங்கஜன் கருத்துக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற தவிசாளர்களும் கருத்துக்களை கூறுனார்கள்.
இந்நிலையில் குறித்த அதிகாரியிடம் யாழ் மாவட்டசெயலகத்தில் இருந்து ஆவணங்கள் எடுத்துச் செல்ல பட்டதா? பளையில் ஆணைக்குழுவின் காணிகளை வேறு மாகாணத்தவர்களுக்கு வழங்குவார்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன்போது பதிலளித்த துறை சார்ந்த அதிகாரிபளையில் வெளி மாவட்டத்தவர்களுக்கு காணி வழங்கியது உண்மை எனவும் தற்போதும் தமக்கு காணிகளை வழங்குமாறு கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தவிசாளர்கள் கூறும்போது வடக்கு மாகாண மக்களுக்கு உரித்தான காணிகளை அந்த மாகாண மக்களுக்குவதோடு வெளி மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு காணி வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்
இதன்போது அமைச்சர் மஹிந்தானந்த காணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட காணி உறுதிப் பத்திரங்களை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கோரி இருந்தார்.
Post a Comment