இலங்கை கறுவாவினால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத சிகரட் (கறுவா சிகரட்) அறிமுகம் செய்யும் நிகழ்வு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று (17) நடைபெற்றது.
இது நாட்டின் உற்பத்திகளில் பாரிய பங்களிப்பை செய்யும் என அறிமுக நிகழ்வில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
100 வீதம் இலங்கை கறுவாவினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிகரட், லயன் ஹர்ட் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் செயற்கை பதார்த்தங்களினால் தயாரிக்கப்பட்ட சிகரட் பாவனையிலிருந்து மக்களை விடுவிக்க இதனூடாக இயலுமை காணப்படுகின்றது என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
Post a Comment