அரசாங்கத்திடம் தாங்கள் எழுப்பும் கேள்விகளிற்கு உரியநேரத்தில் பதில் வழங்கப்படுவதில்லை என எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இன்று எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாங்கள் முன்வைக்கும்கேள்விகளில் கடினமான -பதிலளிக்க முடியாத கேள்விகளை தெரிவு செய்துஅவற்றிற்கு பதில் வழங்குவதை அரசாங்கம் தாமதப்படுத்துகின்றது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது சபாநாயகரின் கௌரவத்திற்கும் உகந்த விடயமல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஓக்டோபர் மாதத்தில் தான் சமர்ப்பித்த கேள்விக்கு அரசாங்கம் இன்னமும் பதிலளிக்கவில்லை என ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
Post a Comment