கிளிநொச்சி கனகராயன் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு எதிர்காலத்தில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் யாழ் மாவட்டம் உட்பட வடக்கு மாகாணத்தில் ஏனைய பிரதேசங்களிலும் குடிநீருக்கான தட்டுப்பாடு காணப்படுவதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் கிளிநொச்சி – இரணைமடு குளத்தில் கனகராயன் ஆற்றுப்பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் மணல் அகழ்வு எதிர்காலத்தில் நீர்த் தேக்கத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற ஒவ்வொருவரும் தங்களது எதிர்கால சந்ததியினை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கேட்டுக்கொண்டார்.
Post a Comment