”தமிழகத்தில் தனி ஈழக் கோரிக்கை; இங்கு யாரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை” - சுசில் பிரேமஜயந்த - Yarl Voice ”தமிழகத்தில் தனி ஈழக் கோரிக்கை; இங்கு யாரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை” - சுசில் பிரேமஜயந்த - Yarl Voice

”தமிழகத்தில் தனி ஈழக் கோரிக்கை; இங்கு யாரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை” - சுசில் பிரேமஜயந்த




தமிழக தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர்களின் விவகாரம் பிரதான தேர்தல் பிரசாரமாகக் காணப்படுகின்றது. தேர்தல் முடிவடைந்த பிறகு தேர்தல் மேடைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு விடும் அல்லது மறக்கப்பட்டு விடும்.

எனவே, தனி ஈழம் தொடர்பில் இந்திய அரசியல் கட்சி குறிப்பிட்டுள்ளதாக வெளிவரும் கருத்துக்கு இங்கு அதிகளவு கவனம் செலுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என தொலை நோக்கு கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பெரும் போராட்டத்துக்கு மத்தியில் 30 வருட கால சிவில் யுத்தம் நிறைவடைந்துள்ளது. தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, நாட்டில் இனியொருபோதும் பிரிவினைவாதச் செயல்பாடுகள் எவ்வழிகளினாலும் தோற்றம் பெறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post