இலங்கையின் உள்ளுர் அரசியலை இந்தியா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரமுயல்வதை அனுமதிக்கப் போவதில்லை என ஐக்கியமக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஆளும் பாஜக தமிழ்நாட்டின் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது அதிமுக தமிழீழம் குறித்த வாக்குறுதியை வழங்கியுள்ளது எனஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி இதனை எதிர்க்கின்றது,இலங்கையின் உள்ளுர் அரசியலில் தீர்க்ககரமான சக்தியாக இந்தியா மாறுவதற்கு அரசாங்கம் அனுமதிப்பது கட்சி எதிர்க்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அசாத் சாலியின் ஷரியா சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இஸ்லாமிய சட்டங்களை தவிர வேறு சட்டங்களை இலங்கை மதிக்கவேண்டியதில்லை என தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சு மதரசாக்களை ஒழுங்குபடுத்துவதை எவரும் எதிர்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment