கொரோனாவைரசினால் உயிரிழந்த சுகாதார பணியாளர்களின் சிறுவர்களிற்கான நூலொன்றில் இளவரசர் ஹரி தனது சிறுவயதில் தாயார் டயனாவை இழந்ததினால் ஏற்பட்ட வேதனையை பதிவிட்டுள்ளார்.
எனது 12 வயதில் எனது தாயாரை இழந்தது எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது ஆனால் அதன் பின்னர் கிடைத்த அன்பு ஆதரவு அந்த காயத்தை ஆற்றியது என ஹரி தெரிவித்துள்ளார்.
நான் சிறுவனாகயிருந்தவேளை எனது தாயாரை இழந்தேன்,அவ்வேளை நான் அதனை ஏற்றுக்கொள்ளவோ நம்பவோ தயாரில்லை என ஹரி எழுதியுள்ளார்.
அந்த மரணம் எனக்குள் பெரும் காயத்தை ஏற்படுத்தியது – நீங்கள் எப்படி உணர்வீர்கள் என்பது எனக்கு தெரியும்- எதிர்காலத்தில் உங்கள் காயங்கள் அன்பினாலும் ஆதரவினாலும் நிரப்பப்படும் என்பதை என்னால் உறுதியளிக்க முடியும் என ஹரி எழுதியுள்ளார்.
நீங்கள் தனிமையை உணரலாம்,நீங்கள் துயரத்தில் தவிக்கலாம்,நீங்கள் கோபமாக உணரலாம்,மோசமாக உணரலாம் ஆனால் அந்த உணர்வுகள் ஒரு நாள் இல்லாமல் போகலாம்,நீங்கள் சிறந்த நிலையை உணர்வீர்கள் என்னால் உங்களிற்கு உறுதியளிக்க முடியும்,என ஹரி எழுதியுள்ளார்.
Post a Comment