ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் ‘செளபாக்கிய கொள்கையின்’ கீழ் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “நீர்ப்பாசன செழுமை" எனும் 5000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் திறன்மிகு செயற்திட்டத்தின் பிரகாரம்
யாழ் மாவட்டத்தில் சுமார் 87 குளங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய வேலணை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ‘மூந்தாய் குளம்’ புனரமைப்பிற்கான அங்குராப்பண நிகழ்வு யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமாநாதன் தலைமையில் இன்று (22) இடம்பெற்றுது.
இந்நிகழ்வில் வேலணை பிரதேச செயலாளர், கமநல சேவைத் திணைக்களத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இத்திட்டத்திற்காக சுமார் 4.9 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment