யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மறவன்புலவு கிழக்கு மக்கள் போராட்டமொனறை சாவகச்சேரி நீதிமன்றம் முன்பாக முன்னெடுத்துள்ளனர்.
மறவன்புலவு கிழக்கு பிரதேசத்தில் தொடர்ச்சியாக ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் அங்குள்ள மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதோடு அங்கு தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தொடர்ந்தும் உயிர் அச்சுறுத்தல் நிலவுவதாக தங்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற குற்றவாளிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
Post a Comment