இன்று காலை கொடிகாமம் மத்தி கிராம செயலகத்தில் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது.
1990 ஆம் ஆண்டு தொடக்கம் கொடிகாமம் திருநாவுக்கரசு நாயனார் மடாலயத்திற்கு சொந்தமான காணியில் சுமார் 11 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இம்மக்களுக்கு சொந்தக்காணிகள் இல்லாமையால் வீட்டுத்திட்டம் உட்பட்ட அரசின் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடைக்கப்பெறாமல் தற்காலிக குடிசைகளில் வாழ்கின்றனர். இதனால் குறித்த கிராமத்தின் சமூக மட்ட அமைப்பினரும் பொதுமக்களும் சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளர் செ.மயூரனிடம் குறித்த காணித் துண்டுகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து கொடிகாமம் திருநாவுக்கரசு நாயனார் மடாலயத்தினரிடம் உபதவிசாளர் மயூரன் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டதற்கிணங்க காணிகள் அற்ற சுமார் 11 குடும்பங்களுக்கு தலா நான்கு பரப்பு வீதம் காணிகள் பகிந்தளிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகளுக்குரிய ஆவணங்களை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், திருநாவுக்கரசு நாயனார் மடாலய தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் ஏகாம்பரநாதன் ஆகியோர் இணைந்து மக்களிடம் வழங்கி வைத்தனர்.
காணி உறுதிகள் வழங்கப்பட்ட மக்களுக்கு சோல்ப் பவுண்டேசன் நிறுவனத்தால் 8 மலசலகூடங்கள் அமைத்து வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment