இலங்கையின் கச்சதீவை இந்தியா எக்காலத்திலும் மீளப்பெறப் போவதில்லை. இலங்கை அரசும் கச்சதீவை விட்டுக் கொடுக்கப் போவதில்லையென இலங்கை பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் வி.முத்துசாமி, தெரிவித்துள்ளார்.
இது குறித்து யாழ்பாணத்தில் இ;று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இலங்கை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் வி.முத்துசாமி, நாங்கள் எந்தவொரு கட்சிக்கும் எதிராவர்கள் இல்லையென மீள வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் இயங்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும், தங்கள் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சுட்டிக்காட்டிய அவர் கட்சி அரசியலிற்கான எண்ணம் தங்களிற்கு இல்லையெனவும் தெரிவித்தார்.
எமது கட்சி பற்றிய அறிவிப்பிற்கு இலங்கையிலும் உலகமெங்கும் இருந்து தமிழ் மக்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
ஏற்கனவே இலங்கையில் நூற்றுக்கணக்கில் கட்சிகள் உள்ள நிலையில் பத்தோடு ஒன்றாக நாங்கள் இருக்க தயாராகவில்லை.
உண்மையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கை அப்பகுதி மக்களது முழுமையாக ஆதரவுடன் மீளக்கட்டியெழுப்புவதே எங்கள் முயற்சியாகும்.புதிய தொழில் முயற்சிகள் அதற்கு தேவையாகும்.
வுடகிழக்கில் புதிய தொழில் முயற்சிக்கு சீனாவோ இந்தியாவோ அல்லது இந்தோனேசியாவோ முதலீடு செய்யலாம்.
அதற்கான உதவிகளை செய்து வழங்கவேண்டும்.
ஊறுகாய்,பப்படம்,ஊதுபத்தி தாண்டி வடகிழக்கில் இப்போது என்ன புதிய தொழில் முயற்சி நடக்கின்றதென கேள்வி எழுப்பிய அவர் தமிழ் மக்களது ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் தோற்காதென தெரிவித்தார்.
எனது தந்தையார் ஒரு கூலி தொழிலாளி.நான் பத்தாவது மட்டுமே படித்தேன்.
ஆனால் விடாமுயற்சியால் நான் தற்போது வளர்ந்துள்ளேன்.
வடக்கிலுள்ள இளைஞர்,யுவதிகளிற்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்.அதற்கேதுவாக மொழிகற்கைகளை இலவசமாக வழங்க மாநகரமுதல்வருடன் பேசி இருக்கிறோம்.
இட ஏற்பாடு செய்யப்பட்டதும் கற்கைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
தமிழ் கட்சிகள் கண்டுகொள்ளாதுள்ள கல்வி,கலாச்சாரம் மற்றும் விளையாட்டை மேம்படுத்துவதன் ஊடாக பொருளாதார மேம்பாட்டை வடகிழக்கில் மேம்படுத்த முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
Post a Comment