யாழ்.மாவட்டத்தில் இவ்வருடம் கிராமிய வீடமைப்பு அமைச்சினால் 1050 வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் வீட்டுத் திட்டம் தொடர்பில் பல தேவைப்பாடுகள் இருக்கின்றது.
எனவே அரசாங்கத்தின் நீதி ஒதுக்கீட்டைப் பொறுத்து விரைவாக வீடில்லா பிரச்சனைக்கு தீர்வு காண எண்ணியுள்ளேன்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் கிராமத்துக்கு ஒரு வீடு திட்டத்தின் கீழ் 435 வீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாது வறிய மக்களுக்காக மின்சாரம் மற்றும் மலசலகூடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் கடந்த வருடம் காணியில்லாத மக்களுக்காக
7 இலட்சம் ரூபா பெறுமதியான 2 பரப்புக் காணிகளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் நிதியுதவி வழங்கியது.
இவ் வருடம் காணிகளின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் புதிய மதிப்பீட்டின் பிரகாரம் வழங்கப்படுகின்ற காணியில் மாற்றம் ஏற்படக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment