பாதுகாப்பு படைகள் (யாழ்ப்பாணம்) தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு
வெளிநாடுகளிலிருந்து வருகைதந்த இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து தமது சொந்த
இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
பாதுகாப்பு படைகள் (யாழ்ப்பாணம்), 52வது தரைப் படைத்தலைமையகம் மற்றும் 521 வது காலாட் படைப்பிரிவின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்ற வசாவிளான் தனிமைப்படுத்தல் மையத்தில்
தனிமைப்படுத்தப்பட்டிருந்த சவுதி அரேபியா, இத்தாலி, லெபனான், கனடா, நியூஸ்லாந்து, சீனா, இந்தியா, கொரியா, அபுதாபி மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த 176 பேர் இரண்டு வாரங்கள்
தனிமைப்படுத்தப்படுத்தலை நிறைவு செய்து 2021 ஏப்ரல் மாதம் 16ம் திகதி பரிசோதனையின் பின் தத்தமது
வீடுகளிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
முல்லைத்தீவு, திருகோணமலை, பொலனறுவை, அம்பாறை, மட்டக்களப்பு, அனுராதபுரம், குருணாகல்,
கேகாலை, கொழும்பு, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, பதுளை, கண்டி, நுவரேலியா, புத்தளம் மற்றும்
மொனராகலை, ஆகிய பிரதேசங்களில் காணப்படும் தமது வீடுகளிற்கு செல்வதற்குரிய போக்குவரத்துவசதிகள், சிற்றுண்டிகள், மதிய உணவுப்பொதிகள், குடிநீர் போன்ற வசதிகளும் இராணுவத்தினரால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தன.
பாதுகாப்புப் படைகளின் பிரதானியும், இராணுவத்தளபதியும் மற்றும் கொவிட் - 19 செயற்பாட்டு மையத்தின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அதிகாரி அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாகவும் பாதுகாப்பு படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம்) கட்டளைத் தளபதி மற்றும் யாழ். கொவிட் - 19 செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டாளருமான மேஜர் ஜெனரல் பியந்த பெரேரா அவர்களின் மேற்பார்வையின் கீழும் இவ்
தனிமைப்படுத்தல் செயற்பாடானது நடைபெற்றது.
மேலும் இச்சந்தர்ப்பத்தில் 521 வது காலாட் படைப்பிரிவின் தளபதி கேணல் மஹேன் சல்வத்துற அவர்கள் உட்பட இராணுவ உயரதிகாரிகளால் தனிமைப்படுத்தலில் இருந்த அனைவருக்கும் சான்றிதழ்கள்
வழங்கப்பட்டிருந்தது. பின்னர் குறித்த தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் தமக்கு தேவையான வைத்திய உதவிகள், உணவு மற்றும் குடிபான வகைகள், பாதுகாப்புகள் மற்றும் தமக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கியமைக்காக இராணுவத்தினருக்கும் மனதார நன்றி
பாராட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment