யாழில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது - களவாடப்பட்ட பொருட்களும் மீட்பு - Yarl Voice யாழில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது - களவாடப்பட்ட பொருட்களும் மீட்பு - Yarl Voice

யாழில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது - களவாடப்பட்ட பொருட்களும் மீட்பு



யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் கடந்த சில மாதங்களாக திருடப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக, யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிறுவனம், கடை, தேவாலயம் மற்றும் வீடு உள்ளடங்கலாக 7 இடங்களில் களவாடப்பட்ட உபகரணங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், சந்தேக நபர்களை நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோவின் வழிகாட்டலில், யாழ்ப்பாண காவல் நிலைய குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி சி.ஐ.நெவில்பியந்த தலைமையிலான குழுவினரே திருடப்பட்ட உபகரணங்களை மீட்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post