யாழ்.வடமராட்சி கிழக்கில் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் மற்றும் பன்றி இறைச்சி என்பவற்றுடன் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு - சுண்டிக்குளம் காட்டுப் பகுதியில் மூவர் வேட்டையில் ஈடுபடுகின்றனர் என்று கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் அவர்கள் தேடுதல் நடத்தினர். இதன் போதே அவர்கள் மூவரும் கடற்படையினரால் பிடிக்கப்பட்டனர்.
பிடிபட்ட நபர்களையும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் இறைச்சி என்பவற்றை கடற்படையினர் மருதங்கேணி பொலி
ஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களைக் கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.
அத்துடன் அவர்களை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment