மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கொரோனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்தே சுகாதார அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் சுகாதார ஊக்குவிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகளில் தீவிர கிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பணியகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகளை தவிர்ப்பதற்காக அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் சுகாதார ஊக்குவிப்புப் பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment