தமிழ் இனத்தின் உரிமைப் போராளியாகவே வாழ்ந்த அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு எம் இனத்திற்கே பேரிழப்பு என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை மதத்தலைவர் என்பதைக் கடந்து எமது இனத்தின் உரிமைகளுக்காக துணிச்சலோடு முன்நின்று செயற்பட்ட பெரியவர்.
கடந்த காலங்களில் எமது இனத்தின் உரிமைக்கான போராட்டங்கள் பலவற்றில் ஆண்டகையோடு இணைந்து பங்குபற்றியமையை எண்ணி பெருமையடைகின்றேன்.
எந்நேரமும் மக்களுக்காகவே வாழ்ந்த ஆண்டகையின் மறைவு கிறிஸ்த்தவர்களுக்கு மட்டுமின்றி தமிழ் மக்கள் அனைவருக்குமே பேரிழப்பாகும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Post a Comment