யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் நிமலராஜனை சுட்டுக்கொன்றவர் இன்று பாராளுமன்றில் கபினட் அமைச்சர்.
பல தசாப்தங்களாக இந்த நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினை தொடர்பில் துளியளவு கூட தனது அடிமனதில் சிந்தனைகள் இல்லாத ஒருவர் தான் இந்த நாட்டின் தற்போதைய ஜனாதிபதி.
ஒரு நாட்டின் தலைவராக இப்போதும் துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற ஒருவராக இன்றைய ஜனாதிபதி இருக்கின்றார். இதனால் இந்த நாடு விரைவில் ஒரு அதள பாதாளத்திற்குள் ஆபத்தான சூழலுக்குள் செல்லப்போகின்றது.
ஊடகவியலாளர்கள் மீது தாக்கும் வகையிலான கருத்துக்களை கூறி ஊடக சுதந்திரத்தை கேள்விக் குள்ளாக்குகின்றார். ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்த நினைக்கின்றார்.
Post a Comment