கதிரியக்கப் பொருள்களைக் கொண்ட சீனக் கப்பலை ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை விட்டு வெளியேறுமாறு இலங்கை உத்தரவிட்டுள்ளது.
குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத் திற்கு அருகிலுள்ள ஆழ்கடலில் பயணித்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதனையடுத்து, குறித்த கப்பல் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட கப்பலின் அதிகாரிகள் அனுமதி கோரியமை தெரியவந்துள்ளது.
ஆனால் கப்பல் பரிசோதிக்கப்பட்டபோது, அதில் கதிரியக்க பொருட்கள் சேமிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இதனையடுத்து குறித்த கப்பலை துறைமுகத்தை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப் பட்டுள் ளது.
Post a Comment