மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியமைக்கு எதிராக தொடர்ச்சியாக தனது எதிர்ப்பை வெளியிட்டு வந்த அந்த நாட்டின் பிரபல நடிகரும் மொடலுமான கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மியன்மார் இராணுவம் கலைஞர்கள் நடிகர்கள் என பலரை தொடர்ச்சியாக கைதுசெய்து வருகின்ற நிலையிலேயே இந்த கைதும் இடம்பெற்றுள்ளது.
டகோனின் இன்ஸ்டகிராமையும் மியன்மார் இராணுவத்தினர் முடக்கியுள்ளனர்.
எட்டு டிரக்குகளில் வந்த 50 இராணுவத்தினர் டகோனை கைதுசெய்தனர் என அவரின் சகோதரி தெரிவித்துள்ளார்.
யங்கோனில் உள்ள அவரது தாயார் வீட்டிலிருந்து டகோன் கைது செய்யப்பட்டார் என அவரின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நடிகர் இராணுவசதிப்புரட்சிக்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்.
தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆங்சான் சூகியின் படங்களை அவர் சமூகஊடங்களில் பதிவு செய்ததுடன் இராணுவசதிப்புரட்சியை கண்டித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
Post a Comment