எந்த கொரோனாவைரஸ் தடுப்பூசியை பயன்படுத்தவேண்டும் என்பதை ஜனாதிபதி கோத்தபாயராஜபக்ச தீர்மானிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
அனைத்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் குறித்தும் ஆராய்ந்து எது உகந்தது என்பதை தீர்மானிப்பதற்காக தேசிய மருந்து ஒழுங்குபடுத்தும் அதிகார சபை குழுவொன்றை நியமித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் அவர்கள் இலங்கைக்கு எந்த மருந்து பொருத்தமானது என்பதை தீர்மானித்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் தடுப்பூசிகள்குறித்து போதிய தகவல்கள் இல்லை அது எங்களிற்கு பொருத்தமில்லாதது என எங்கள் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் எனவும் ராஜிதசேனாரட்ண தெரிவித்துள்ளார்.
ஆகவே ஏன் ஜனாதிபதி அந்த மருந்தினை இறக்குமதி செய்கின்றார் என கேள்வி எழுப்பியுள்ள அவர் மியன்மாரில் கூட எந்த தடுப்பூசியை மக்களிற்கு வழங்கவேண்டும் என்பதை ஜனாதிபதி தீர்மானிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
Post a Comment