யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட வதிவிடத்தை உறுதிப்படுத்தக்கூடிய முடக்கப்பட்ட பகுதிக்கு உட்பட்ட வர்த்தகர்களுக்கும், ஊழியர்களுக்கும் 05.04.2021 திங்கட்கிழமை அன்று காலை 7.30 மணிக்கு நவீன சந்தைக் கட்டிடத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என சுகாதார வைத்திய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28,29 ஆம் திகதிகளில் pcr செய்தவர்களுக்கும,; இதுவரை Pcr
செய்யாதவர்களுக்கும் இந்தப் பரிசோதனை செய்யப்படும். 28,29 ஆம் திகதிகளில் செய்யப்பட்ட Pcr பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் திங்கட்கிழமை நடைபெறும் Pcr பரிசோதனைக்கு வருகைதர வேண்டாம்
என்றும் அவர்களுக்கு பிறிதொரு தினத்தில் Pcr செய்யப்படும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகரசபை எல்லைக்கு வெளியில் வதிவிடத்தைக் கொண்டவர்கள்
அந்தந்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு Pஊசு பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் திங்கட்கிழமை நடைபெறும் Pcr பரிசோதனைக்கு 500 பேர்
மாத்திரமே உள்வாங்கப்படுவதோடு ஏனையோருக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த தினங்களில்
பிசின் பரிசோதனைகள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment