தீபிகா படுகோனேவிடம் கோரிக்கை வைத்த விஜய் ரசிகர்கள் - Yarl Voice தீபிகா படுகோனேவிடம் கோரிக்கை வைத்த விஜய் ரசிகர்கள் - Yarl Voice

தீபிகா படுகோனேவிடம் கோரிக்கை வைத்த விஜய் ரசிகர்கள்




விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு தான் கெத்தாக நடந்து வரும், வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை தீபிகா படுகோன்.விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களிடம் இன்னும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக 'கோச்சடயான்' என்ற படத்தில் நடித்தார்.தீபிகா தனது படப்பிடிப்பிலிருந்து வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பின்னணியில், நடிகர் விஜய்யின் "வாத்தி கம்மிங்" என்ற ட்ரெண்ட் செட்டிங் பாடல் இசைக்கிறது. அதை அவர் "பி.டி.எஸ் ஆஃப் பி.டி.எஸ்" என்ற தலைப்பில் தலைப்பிட்டுள்ளார். அந்த பாடலின் இசையுடன் தீபிகா அழகாக நடப்பது கச்சிதமாக பொருந்துகிறது.

இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் காட்டுத்தீ போல சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.மேலும் தீபிகாவிடம், விஜய்யுடன் விரைவில் இணைந்து நடிக்குமாறு   கோரிக்கை வைத்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post