தமிழர் தேசம் மீண்டும் ஒரு மாமனிதரை இழந்து நிற்கின்றது - தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை - Yarl Voice தமிழர் தேசம் மீண்டும் ஒரு மாமனிதரை இழந்து நிற்கின்றது - தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை - Yarl Voice

தமிழர் தேசம் மீண்டும் ஒரு மாமனிதரை இழந்து நிற்கின்றது - தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை



முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அருட்திரு இராயப்பு ஜோசப் அவர்களின் இழப்பானது உலகத் தமிழர்களுக்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும் என தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஊடகஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்இ 'ஆண்டகை ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் அவர்கள் சிங்கள தரப்பினரால் தமிழர்கள் மீது ஏற்படுத்திய அனைத்து பிரச்சனைகளையும் அதனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களையும் கண்கண்ட சாட்சியாக இலங்கை தாண்டி சர்வதேசம் வரை கொண்டுசேர்த்த ஒரு உரிமைக் குரலாக இறுதிவரை செயற்பட்ட ஒரு மாமனிதர்.

குறிப்பாக தமிழ் மக்களோடு மிகவும் நெருங்கிப்பழகிய ஆயர் அவர்கள் எமது இன விடுதலைப் போராட்டத்தின் இக்கட்டான அனைத்து சூழ்நிலைகளிலும் தமிழ்மக்களுக்கு ஆதரவாக முன்னின்று குரல் கொடுத்து  போராடிய ஒருவராவார்.

இனஇமதஇமொழிகளைக் கடந்து தான் நேசித்த நாட்டு மக்களின் உரிமைகளிற்காகவும் அடக்கு முறைகளுக்காகவும் அயராது பணியாற்றிய ஒரு மாமனிதரை இன்று எம் தமிழர் தேசம் இழந்து நிற்கின்றது.

தமிழர்களின் விடுதலைஇ உரிமைஇ நலங்களிற்காக மட்டுமே ஓயாது குரல் கொடுத்து இறுதிவரை போராடி இன்று நித்தியவாழ்விற்கு சென்ற ஆண்டகை ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் அவர்களுக்கு தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையினர் வீர அஞ்சலிகளை தெரிவிப்பதோடு ஆண்டகையின் மறைவால் துயறுற்றிருக்கும் அவரது உறவினர்கள்இ திருச்சபையினர்இ உலகுவாழ் தமிழ்மக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post