ரஸ்யா எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவல்னியை மெதுவாக கொலை செய்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை குற்றம்சாட்டியுள்ளது.
எதிர்கட்சி தலைவர் சித்திரவதை என வர்ணிக்கப்படக்கூடிய சூழலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை ரஸ்யா அவரை மெதுவாக கொலை செய்யலாம் என குறிப்பிட்டு;ள்ளது.
எதிர்கட்சி தலைவரின் உறக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன அவர் நம்பக்கூடிய மருத்துவர் எவரும் சிறையில் இல்லை என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
ரஸ்யாவும் ரஸ்ய அதிகாரிகளும் அவரை மெதுவாக கொலை செய்ய முயல்கின்றனர் அவருக்கு தற்போது இடம்பெறுவதை மறைக்க முயல்கி;ன்றனர் என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னேஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.
ரஸ்ய அதிகாரிகள் அவரது உரிமைகளை மீறுகின்றனர் எனஅவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment