யாழ் நகரில் மூடப்பட்டிருக்கும் கடைகளில் அரைவாசிக்கு மேற்பட்ட கடைகள் நாளைய தினம் திறக்கப்பட உள்ளதாகவும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறும் யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகர சபையில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...
கடந்த 26 ஆம் திகதியிலிருந்து யாழ் நகர வியாபாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களில்
75 ற்கும் மேற்பட்ட கடைகளை தவிர ஏனைய கடைகள் நாளைய தினம் மீள திறக்கப்படும்.
இன்று காலை யாழ் மாநகர சபை பொது வைத்திய அதிகாரி தலைமையில் நடந்த கூட்டத்தின் போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை தவிர்ந்த அரைவாசிக்கு மேற்பட்ட கடைகள் நாளை திறக்க அனுமதிக்கப்பட உள்ளன.
போக்குவரத்து சேவைகளை தற்போது உள்ள நிலை போன்று பண்ணை பகுதியிலே பேணுவதற்கு தீர்மானித்துள்ளோம், எனினும் அது தொடர்பான முடிவை எதிர்வரும் நாட்களில் கூடிய ஆராய உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
Post a Comment