பிரித்தானிய தூதுவரை சந்தித்த கூட்டமைப்பு - Yarl Voice பிரித்தானிய தூதுவரை சந்தித்த கூட்டமைப்பு - Yarl Voice

பிரித்தானிய தூதுவரை சந்தித்த கூட்டமைப்பு



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹமில்டனை உத்தியோக பூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

இந்த சதிப்பு இன்றையதினம் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ கட்சியின் ஊடக பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள், அரசியல் தீர்வு, மாகாணசபை தேர்தல்கள், நில அபகரிப்பு, அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாகவும், குறித்த சப்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்றிருந்ததாகவும் கு.சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் ரெலொ கட்சியின்  தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post