சுகாதார தொண்டர்கள் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குள் உள்வாங்கப்படுவார்கள் - ஜனாதிபதி இணங்கியுள்ளதாக அங்கஜன் தெரிவிப்பு - Yarl Voice சுகாதார தொண்டர்கள் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குள் உள்வாங்கப்படுவார்கள் - ஜனாதிபதி இணங்கியுள்ளதாக அங்கஜன் தெரிவிப்பு - Yarl Voice

சுகாதார தொண்டர்கள் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குள் உள்வாங்கப்படுவார்கள் - ஜனாதிபதி இணங்கியுள்ளதாக அங்கஜன் தெரிவிப்பு



 யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கடந்த 30 நாட்களாக சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். தமது போராட்டத்தைப் பல்வேறு இன்னல்கள், அசௌகரியங்கள் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.

 இந்த நிரந்தர நியமனம் அற்ற சுகாதார தொண்டர்கள் தொடர்பில் பல்வேறு உயர்தரப்பினருடன் கலந்துரையாடி வந்த யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் இன்றைய தினம் (01) ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டத்தொடரில் இந்த சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் கூறி இந்த தொண்டர்களுக்கான தீர்வை தருமாறு கேட்டிருந்தார். 

இந்த விடயத்தை பற்றி கேட்டறிந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ புதிய அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்டு வரும் “சுபீட்சத்தின் சநோக்கு” செயற்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்திற்க்கு அமைய சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த விவசாய அமைச்சர் கௌரவ மகிந்தாநந்த அளுத்கமகேயையும் யாழ் மாவட்டப் அபிவிருத்தி குழு தலைவர் அங்கஜன் இராமநாதனையும் சுகாதார தொண்டர்களின் சுகாதார உதவியாளர் நிரந்தர நியமனம் தொடர்பில் கூறினார்கள்.

 இச்சமயம் இது தொடர்பில் தாம் ஜனாதிபதியின் நேரடிக் கவனத்திற்கு கொண்டுவந்து சுகாதார தொண்டர்களின் பிரதிநிதிகள் சிலரை கொழும்பில் ஜனாதிபதியை நேரடியாகச் சந்திப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்வதாக அமைச்சர் மற்றும் அங்கஜன் உறுதியளித்திருந்தார்.

 அதற்கிணங்க அந்த சந்திப்பும் நடைபெற்று தற்போது ஜனதிபதியுடன் கலந்துரையாடி இந்த பிரச்சனைக்கான தீர்வும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post