மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இன்றுஇயற்கை எய்திய செய்தி எம்மை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் ஆத்மா இறைவனடி சேர்ந்து சாந்திபெற நாம் யாவரும் யாசிக்கின்றோம்.
ஆயர் பணியில் 25 வருடங்கள் சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற போதும் அவர்வெறுமனே இறைபணியுடன் மட்டும் நின்றுவிடாது மக்கள் பணியிலும் விசேடமாக தமிழ் மக்கள்சார்பான நலன்கள் தொடர்பில் அதீத அக்கறை காட்டியதுடன் அனைவரும் இந்ந நாட்டின் குடிமக்களாக சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய வகையில் நேரிய வழிகாட்டியாக வாழ்ந்து எம்மையெல்லாம் அரவணைத்துச் சென்றவர்.
கத்தோலிக்க மக்களின் புனிதவாரம் அனுஷ்டிக்கப்படும் இந்த வாரத்தில் மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இறையடி சேர்ந்தமைஅவரின் இறை வாழ்க்கையைக் கோடிட்டுக் காட்டுகின்றதாகதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
Post a Comment