"இராணுவ பின்னரங்கு பகுதியில் இருந்த மிருசுவில் கிராமத்திற்குள்ளே சென்று, இராணுவ ஒழுக்கத்தை மீறி, அப்பாவி தமிழ் மக்களை வெட்டிக் கொன்ற கொலைக்கைதி இராணுவ சிப்பாய் இரத்நாயக்கவை விடுவித்தது பிழை" என முன்னாள் இரானுவ தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, பேசியதற்காக, சரத் பொன்சேகா எம்பியை, அவரது உரை முடிந்ததும், அருகில் சென்று கைலாகு கொடுத்து, முதுகில் தட்டி பாராட்டியதாக மணோகனேசன் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது நண்பர்கள் சுமந்திரன், ரவூப் ஆகியோரும் பொன்சேகாவை பாராட்டினார்கள்.
நாங்கள் இந்த கருத்தை சொல்வதை விட, முன்னாள் இராணுவ தளபதி இவ்விதம் சொல்வது சிங்கள மக்களை சிந்திக்க தூண்டும் என நாம் நினைக்கின்றோம் என மணோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment