ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவை நோக்கி செல்லவில்லை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
பொதுஜனபெரமுனவில் இடம்பெற்றுள்ள கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் உறுதியான புரிந்துணர்வு காணப்படுகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சில கருத்துவேறுபாடுகளும் புரிந்துணர்வின்மைகளும் காணப்படலாம் ஆனால் இறுதியில் இணக்கப்பாடு எட்டப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவில் 12 கட்சிகள் உள்ளன நாங்கள் மிகவும் புரிந்துணர்வுடன் செயலாற்றுகின்றோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கட்சிபிளவுபடும் அளவிற்கு புரிந்துணர்வின்மை காணப்படவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் பொதுஜனபெரமுன பிளவுபடவேண்டும் என்பதை சிலர் பார்க்க விரும்புகின்றனர் ஆனால் அது இடம்பெறாது என தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் மேதினப்பேரணிகளை தனியாக நடத்த விரும்புகின்றன இது ஒரு விடயமல்ல கடந்தகாலங்களில் இது இடம்பெற்றுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது அனைவரும் ஒரேமேடையில் தோன்றுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment