யாழ் நகர வர்த்தக நிலையங்களை நாளை திறக்கலாம் - சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice யாழ் நகர வர்த்தக நிலையங்களை நாளை திறக்கலாம் - சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice

யாழ் நகர வர்த்தக நிலையங்களை நாளை திறக்கலாம் - சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு




வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் ஊடக சந்திப்பொன்றை இன்று நடாத்லியுள்ளார்.

யாழ்.மாநகர வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களிடம் பெறப்பட்ட 1000 பீ.சி.ஆர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகும். என கூறியிருக்கும் மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்இ 

பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தொற்று உறுதிப்படுத்தப்படாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்கள் வர்த்தக நிலையங்களை நாளை திறக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறியிருக்கின்றார். 

தற்போதைய நிலமை தொடர்பாக இன்று காலை ஊடகங்களுக்கு விளக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்இ 1வது தொகுதி பீ.சி.ஆர் முடிவுகள் இன்று வெளியானது. 

அதில் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2வது தொகுதி இன்று வெளியாகும். இதனடிப்படையில் தொற்று இனங்காணப்படாத வர்த்தக நிலைய உரிமையாளர் தங்கள் வர்த்தக நிலையங்களை நாளை முதல் திறக்கலாம். 

மேலும் திருமண மண்டபங்கள்இ திருமண நிகழ்வுகள். மரண சடங்குகள்இ மற்றும் பொது நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்ந்தும் நீடிக்கும். மேலும் பாடசாலைகள் முன்னர் அறிவிக்கப்பட்டதைபோன்று 19ம் திகதியே ஆரம்பமாகும் என பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post