-கிளியில் கொரோனா தொற்று- மாணவர்கள் - 06 பொலீஸார் - 20 - Yarl Voice -கிளியில் கொரோனா தொற்று- மாணவர்கள் - 06 பொலீஸார் - 20 - Yarl Voice

-கிளியில் கொரோனா தொற்று- மாணவர்கள் - 06 பொலீஸார் - 20




கிளிநொச்சியில் இன்று திங்கள் கிழமை வெளியிடப்பட்ட பிசிஆர் முடிவுகளின்படி கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் ஆறு மாணவர்களும், கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில்  14 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் 22 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

 இந்நிலையில் தொற்றுக்குள்ளான பொலிஸாருடன் நெருக்கமான தொடர்பிலிருந்த பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். 

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை போதே புதிதாக 14 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிளிநொச்சியில் 36 பொலீஸாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு  தொற்று ஏற்பட்டிருந்தது.

 இதனையடுத்த குறித்த வகுப்பில் உள்ள மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டட பிசிஆர் முடிவுகளும் இன்று வெளிவந்த நிலையில் அதில் ஆறு மாணவர்களுக்கு தொற்று  ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post