கொரோனாவால் இரட்டை சகோதரர்கள் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ! - Yarl Voice கொரோனாவால் இரட்டை சகோதரர்கள் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ! - Yarl Voice

கொரோனாவால் இரட்டை சகோதரர்கள் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் !



மீரட் நகரில் இரட்டை சகோதரர்கள் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. 

இருவருமே 24 வயதை எட்டிய இளைஞர்கள் ஆவர்..! கேரளாவை சேர்ந்தவர் கிரிகோரி ரேமண்ட் ரபேல்.. இவரது மனைவி சோஜா.. இருவருமே ஆசிரியர்கள்.. மீரட்டில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளியின் டீச்சர்களாக வேலை பார்த்து வேலை பார்த்து வருகிறார்கள்.

இவர்களுக்கு ஜோஃப்ரெட் வர்கீஸ் கிரிகோரி, ரால்பிரட் வர்கீஸ் கிரிகோரி என்ற இரட்டை மகன்களும், ஒரு மூத்த மகனும் உள்ளனர். இந்நிலையில், மே 13-ம் தேதி, கிரிகோரி தம்பதியினருக்கு அப்போது போன் ஒன்று வந்துள்ளது..

இரட்டை மகன்களில் ஒருவரான ஜோஃப்ரெட் வர்கீஸ் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாகவும், இன்னொரு மகன், ரால்பிரட் வர்கீஸ் தொற்று பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ந்து போன தம்பதியினர், உடனடியாக கிளம்பி ஆஸ்பத்திரி சென்றனர்.. மகன் உயிரிழந்ததை நினைத்து கதறி கதறி அழுதனர்..
பிறகு, சிகிச்சையில் உள்ள இன்னொரு மகனை பார்க்க வார்டுக்கு சென்றனர். அப்போது, அவர்களை பார்த்ததும், என்ன நடந்தது? ஏன்ம்மா இப்படி இருக்கீங்க? ஏதோ என்கிட்ட மறைக்கிறீங்க? என்று தன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்.. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் ரால்பிரட்டின் உயிர் பரிதாபமாக இருந்தது..

இந்த இரட்டையர்கள் 3 நிமிட இடைவெளியில் பிறந்தவர்களாம்.. ஆனால், 1 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.. இருமகன்களையும் பறிகொடுத்துவிட்டு, பெற்றோர் கதறி அழுதது காண்கோரை நிலைகுலைய வைத்துவிட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post