நெல்லியடி வெதுப்பகத்துடன் நேரடித் தொடர்பு கொண்டோர், பழக் கடை வியாபாரி, வணிகள் வளாகம் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள் என வடமராட்சியில் நேற்று 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லியடி வெதுப்பகத்துடன் தொடர்புடைய மற்றும் முறையான வகையில் முகக் கவசம் அணியாத 70 பேருக்கு எடுக்கப்பட்டது. இதில் வெதுப்பகத்துடன் நேரடித் தொடர்பு கொண்ட 33 பேருக்கு தொற்று உறுதியானது.
இவர்கள் தவிர பருத்தித்துறை நகர சபை உத்தியோகத்தர்கள் இருவர், தொற்று அறிகுறிகளுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இயங்கும் வணிக வளாக உரிமையாளர் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
Post a Comment