யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் சிகிச்சை அளிப்பதற்காக யாழ் நாவற்குழிப் பகுதியில் 600 படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை நிலையம் தயார் செய்யப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் வட்டுக்கோட்டை தொழில்நுட்பக்கல்லூரி ஆகியன ஏற்கனவே கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன என்றார்.
Post a Comment