வரும் வாரம் நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் விரும்பினால் கலந்து கொள்ளலாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபாயவர்தன தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் றிசாட் பதியுதீன் பாராளுமன்ற விதிகளின் படி அனுமதி கோரினால் அவரை அரசாங்கத்தின் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய பாராளுமன்றத்திற்கு அழைத்து செல்லுமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள இயக்குனருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அதேவேளை சிறையில் உள்ள இரத்தினபுரா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமாலை ஜயசேகரவும் விரும்புவினால் அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment