முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான இன்று, பொத்துவில் - பொலிகண்டி மக்கள் பேரேழுச்சி இயக்கத்தினால் தமிழர் தாயகத்தில் மரம் நடுகை செய்யும் திட்டத்தின் கீழ் பொன்னாலையில் மரக்கன்று ஒன்று நடுகை செய்யப்பட்டது.
இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை அளவான மரக்கன்றுகளை வடக்கு,கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் நடுகை செய்வது என மேற்படி மக்கள் இயக்கம் எடுத்துள்ள முடிவுக்கு அமைய இந்த மரம் நடுகை ஆரம்பமானது.
முதலாவது மரக்கன்றை தவத்திரு வேலன் சுவாமிகள் இன்று (18) காலை முள்ளிவாய்க்காலில் நடுகை செய்து வைத்தார். இதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.
இதேவேளை, பொன்னாலையைச் சேர்ந்த 11 பொதுமக்கள் கடற்றொழிலுக்கு சென்றபோது படுகொலை செய்யப்பட்ட நினைவாக, பொன்னாலை சந்திக்கு சமீபமாகவும் இன்று மேற்படி இயக்கத்தின் ஏற்பாட்டில் மரக்கன்று ஒன்று நடுகை செய்யப்பட்டது.
தனது இரு பிள்ளைகளை பலிகொடுத்த தந்தை ஒருவர் இந்த மரக்கன்றை நடுகைசெய்தார்.
Post a Comment