எனக்கு நடிக்கும் எண்ணம் இல்லை- நடிகை ரோஜாவின் மகள் - Yarl Voice எனக்கு நடிக்கும் எண்ணம் இல்லை- நடிகை ரோஜாவின் மகள் - Yarl Voice

எனக்கு நடிக்கும் எண்ணம் இல்லை- நடிகை ரோஜாவின் மகள்



தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏராளமான தமிழ்ப்படங்களை நடித்து குவித்தவர் நடிகை ரோஜா. இவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு அன்சுமாலிகா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். மகள் அன்சுமாலிகா சினிமாவில் நடிக்கப் போவதாக கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக சில தகவல்கள் வெளியாகி வந்தன. 

இந்த நிலையில் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. அப்போது ரசிக்ர்கள் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு “வருங்காலத்தில் எனது மனம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடப்பேன், இதுவரைக்கும் நடிக்கும் எண்ணம் இல்லை” என்று அவர் பதில் அளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post