வடக்கு அரேபிய சர்வதேச கடற்பரப்பில் பயணித்த பாரிய ஆயுதக் கடத்தல் கப்பலை கைப்பற்றியது அமெரிக்க கடற்கடை.
குறித்த கப்பலில் ரஷ்ய மற்றும் சீன ஆயுதங்கள் பெருந்தொகையில் இருப்பதாக அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ளது.
குறித்த ஆயுதக் கப்பலில், டசின் கணக்கான ரஷ்யா தயாரிப்பிலான ஏவுகணைகள், ஆயிரக்கணக்கான சீன வகை 56 ரக துப்பாக்கிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பி.கே.எம் இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் ரொக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகள் உள்ளிட்ட பெருந்தொகை ஆயுதங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment