கொவிட் தொற்றுப் பரவலால் நாடு ஆபத்தான நிலைமையில் இருப்பதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அந்தச் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
அவர் அதன்போது தெரிவித்துள்ளதாவது,
முதலாவது அலையை போன்றது அல்ல தற்போது பரவும் கொரோனா அலை. அதன் பரவும் வேகம் அதிகமாகும்.
குறுகிய காலத்திற்குள் அதிகமானர்கள் பீடிக்கப்படலாம். இது மிகவும் அபாயகரமானது. இதிலிருந்து தப்பிக்க வேண்டுமாயின் முறையாக முகக் கவசங்களை அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இந்த நோயினால் பாதிக்கப்படுவோர் நிமோனியா நிலைக்கு தள்ளப்படுவர். இது ஆபத்தானது. இந்த நோயிற்கு ஒட்சிசன் அவசிமாகும். இங்குள்ள வசதிகளை பார்க்கும் போது அதிகளவில் தொற்றுப் பரவினால் பேரனர்த்ததை எதிர்கொள்ள நேரிடும். இதனால் மக்கள் இதனை மிகவும் ஆபத்தானதாக உணர்ந்து செயற்பட வேண்டும்.
Post a Comment