பங்களாதேசிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் இரு வீரர்களும் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கை அணியின் சகலதுறை வீரர்; இசுரு பெர்ணான்டோ புதிய வேகப்பந்து வீச்சாளர் சிரான் பெர்ணான்டோ பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்தவாஸ் ஆகியோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அணியின் முகாமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இன்று முதலாவது ஒரு நாள் போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அணி இரண்டாவது பிசிஆர் சோதனைக்காக காத்திருப்பதாக அணியின் முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அணியின் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை காரணமாக முதலாவது ஒரு நாள் போட்டி திட்டமிட்டபடி இடம்பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Post a Comment