சீன தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் - ஜனாதிபதி கோத்தாபாய - Yarl Voice சீன தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் - ஜனாதிபதி கோத்தாபாய - Yarl Voice

சீன தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் - ஜனாதிபதி கோத்தாபாய



சீன தடுப்பூசியைப் பயன்படுத்த அங்கீகாரம் அளிப்பதாக உலக சுகாதார நிறுவனம் இன்று என்னிடம் உறுதியளித்தது:

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO)பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom)  அவர்கள் இன்று என்னுடன் உரையாடினார். 

இணைய மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலுக்கு பலன் கிட்டியுள்ளது.

கோவிட் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட வேலைத்திட்டங்களுக்கு உலக சுகாதார நிறுனத்தின் பாராட்டுக்களைத் தெரதிவித்த திரு. டெட்ரோஸ் அவர்கள், அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் என்னிடம் கூறினார்.

முதல் கோவிட் அலைக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்து  தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு நமது அரசாங்கம் வழங்கிய தலைமைத்துவத்தை டெட்ரோஸ் அதானோம் அவர்கள் பாராட்டினார்.

இதன்போது -  உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையில் நடைபெற்ற மாநாடுகளில் இலங்கையின் வெற்றி குறித்து கலந்துரையாடப்பட்டதனையும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இம்முறையும் கோவிட் பரவுவதை விரைவில் கட்டுப்படுத்த இலங்கை அரசினால் முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இரண்டாவது கட்டமாக தடுப்பூசி ஏற்றுவதற்கு 20 மில்லியன் “அஸ்ட்ரா செனகா“ தடுப்பூசிகளுக்கான தேவை உலகளவில் உள்ளது.

எமது நாட்டில் அதன் தேவை 600,000 தடுப்பூசிகளாகும்.

அந்த தேவையை பூர்த்தி செய்ய உலக சுகாதார நிறுவனம் உதவுமென்ற எனது நம்பிக்கையை நான் வெளிப்படுத்தினேன்.

“சைனோபார்ம்“ (Sinopharm) தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு அடுத்த மூன்று நாட்களுக்குள் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தை வழங்கக் கூடியதாக இருக்கும் என்று திரு. டெட்ரோஸ்  என்னிடம் குறிப்பிட்டார்.

அந்த அனுமதி கிடைத்தவுடன் நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு “சைனோபார்ம்“ தடுப்பூசியை வழங்க முடியும் என்று நான் அவரிடம் சுட்டிக்காட்டினேன்.

உலக சுகாதார நிறுவனம் பிராந்திய மட்டத்திலும் அதன் கொழும்பு அலுவலகத்தின் ஊடாகவும் எமது நாட்டுக்கு அளித்துவரும் ஒத்துழைப்புக்கு எனது நன்றிகளையும் நான் அவருடம் தெரிவித்தேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post