எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ளார்
டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று தனது மனைவி கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தெரிவித்துள்ள அவர் அதன் பின்னர் பிசிஆர் சோதனையின் போது அவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியது என குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி நானும் பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்டேன் என தெரிவித்துள்ள அவர் இன்று மதியம் தான் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடியான தருணத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எதிர்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் தொடர்ந்தும் தனது முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்படும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment