நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு பொலிஸாரால் பயண அனுமதி வழங்கப்பட்டபோதும் ஊடகவியலாளர்கள் மீது இராணுவத்தின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக யாழ்பாணம் - முல்லைத்தீவு நகர் பகுதிக்கு செய்தி அறிக்கையிட செல்லும் ஊடகவியலாளர்களை பொலிஸார் அனுமதித்த போதும் வீதி சோதனை சாவடிகளில் படையினர் அனுமதி மறுத்து வருவதாக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.